Advertisment

ஹன்சிகா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் !

hansika

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டான தோற்றத்துடன் நடித்த ஹன்சிகாவை ரசிகர்கள் அன்பாக குட்டி குஷ்பூ என்று அழைத்தனர். பிறகு வெற்றிகரமாக பப்லியான தோற்றத்துடன் முதல் ரவுண்டை முடித்த ஹன்சிகா தன் இரண்டாவது ரவுண்டில் சற்று மெலிந்து அழகான தோற்றத்துடன் மான் கராத்தே படம் மூலம் மீண்டும் ஒரு வந்தார். இதையடுத்து புகழின் உச்சியில் இருக்கும் போதே சமீபமாக அதிகப்படங்களில் நடிக்காமல் சில காலம் ஓய்வில் இருந்த ஹன்சிகா மீண்டும் மிகவும் உடல் மெலிந்த தோற்றத்துடன் வரும் டிசம்பர் 14ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள 'துப்பாக்கி முனை' படம் மூலம் தனது மூன்றாவது ரவுண்டை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து 100 மற்றும் மகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

Advertisment

thupakkimunai hansika
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe