Advertisment

புது தொழில் தொடங்கிய ஹன்சிகா!

hansika

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.

Advertisment

தற்போது இவரது நடிப்பில் 'மஹா' என்றொரு படம் உருவாகி வருகிறது. இது இவருடைய 50ஆவது படமாகும். இந்தப் படத்தில் சிம்புவும் கௌரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். இதன் பின் ஹன்சிகாவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா 'தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்' என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். கல்யாணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்காக பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களைச் செய்வதுதான் அந்த நிறுவனத்தின் சிறப்பாம்.

முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கினார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் இதுபோன்ற தொழில்களில் ஹன்சிகா ஆர்வம் காட்டி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. .

Advertisment
Hansika Motwani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe