/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/39_23.jpg)
ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில்நடித்துள்ளார். இப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகை ஹன்சிகா பேசுகையில், “மஹா படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது இது என்னுடைய 50ஆவது படமாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என்னுடைய அம்மாதான் உன்னுடைய 50ஆவது படமாக மஹா இருக்க வேண்டும் என்றார். மஹா படத்தில் பணியாற்றிய அனுபவம் என்னுடைய சினிமா கேரியரில் புது அத்தியாயம். பல்வேறு காரணங்களால் இந்தப் படம் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். படத்தில் நடித்த எல்லோருமே தங்களது ரோலை சிறப்பாக செய்துள்ளனர். மஹா சிறப்பான படமாக உருவாகியுள்ளது. ஒரு போன் காலில் அழைத்ததும் வந்து நடித்துக் கொடுத்த நண்பர் சிம்புவிற்கு நன்றி. அந்தக் கதாபாத்திரத்தில் அவர்தான் நடிக்க வேண்டும் என்றபோது உடனே வந்து நடித்துக்கொடுத்தார். அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மஹா படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)