Hansika Motwani

Advertisment

மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை ஹன்சிகா, தனுஷ், விஜய், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து, மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அந்தஸ்திற்கு உயர்ந்தார். சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் வணிக ரீதியாகப் பெரிய அளவில் வெற்றியை ஈட்டாததால் மிகக் குறைவான பட வாய்ப்புகளே அவருக்கு கிடைத்துவருகின்றன.

இந்த நிலையில், ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. ரவுடி பேபி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ சரவணன் இயக்குகிறார். ரமேஷ் பிள்ளை தயாரிக்க, பி.செல்லத்துரை ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பாடல்களை எழுதும் கவிஞர் வைரமுத்து, க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார்.