hansika react telugu hero dating news

நடிகை ஹன்சிகா தற்போதுஇகோர்இயக்கும் 'மேன்' படத்தில் நடித்து வருகிறார்.ஆரி வில்லனாகநடிக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும்ஆதி நடிப்பில் உருவாகி வரும் 'பார்ட்னர்', 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'ரவுடி பேபி', உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். அதோடு இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் ஹன்சிகா குறித்து ஒரு செய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த செய்தியில், ஹன்சிகா திரைத்துறைக்கு வந்த புதிதில் தெலுங்கு இளம் நடிகர் ஒருவர் டேட்டிங்கிற்கு அழைத்து தொடர்ந்து டார்ச்சர் பண்ணியதாகவும்பின்பு அவருக்கு சரியான பாடம் புகட்டிவிட்டதால்தொல்லை கொடுக்கவில்லை என்றும் ஹன்சிகா கூறியது போல குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில்இந்த செய்திக்கு ஹன்சிகா மறுப்பு தெரிவித்துள்ளார். அவரதுட்விட்டர் பக்கத்தில் தான் கூறியதாக சொன்ன செய்தியின் பக்கத்தை பகிர்ந்து, "இதில் குறிப்பிட்டதை போல்நான் எங்கேயும் எப்பவும்சொன்னதில்லை. இதுபோன்ற குப்பை செய்திகளை நிறுத்துங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். மற்றொரு பதிவில், "ஒரு செய்தியை பற்றி கூறுகையில் தயவு செய்து அதை சரி பார்த்து பதிவிடுங்கள். கண்மூடித்தனமாக உண்மைத்தன்மை அறியாமல் செய்தியைவெளியிடாதீர்கள்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.