Advertisment

“எல்லோரும் சமம் தான்” - திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்த ஹன்சிகா பேட்டி

hansika press meet at chennai airport

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்துள்ள ஹன்சிகாதொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம்தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களதுதிருமணம் ஒரு நிகழ்ச்சியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையம்வந்த ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் பூ கொடுத்து வரவேற்றனர். அதனைஏற்றுக்கொண்ட ஹன்சிகா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகையில், "தாய் வீட்டிற்கு மீண்டும் வருவது போல் உணர்கிறேன். மீண்டும் நடிக்கவந்தது சந்தோஷமாகஉள்ளது. இந்த வருடம் மொத்தம்7 படங்களில் கமிட்டாகியுள்ளேன். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை ரொம்ப நன்றாக இருக்கிறது.

Advertisment

இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லோரும் சமம் தானே. அதனால்தான் நான் மீண்டும் இங்கு நடிக்க வந்துள்ளேன். திருமணத்திற்கு பின்பு எந்த மாற்றமும் இல்லை. கையில் ஒரே ஒரு மோதிரம் தான் இருக்கிறது. மற்றபடி எல்லாம் முன்பு போலத்தான் இப்போதும் இருக்கிறேன்" என்றார்.

ஹன்சிகா,ஆதி நடிப்பில் உருவாகி வரும் 'பார்ட்னர்', 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'ரவுடி பேபி' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். மேலும், இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hansika Motwani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe