இயக்குநர்ஆர்.கண்ணன் இயக்கத்தில் வெளியான 'கண்டேன் காதலை', 'சேட்டை', 'இவன் தந்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர்தற்போது மலையலத்தில்ஹிட்டடித்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக்கைஐஸ்வர்யா ராஜேஷை வைத்து இயக்கியுள்ளார். இதனிடையே மிர்ச்சி சிவா, யோகி பாபு பிரியா ஆனந்த் நடிக்கும் 'காசேதான் கடவுளடா' படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இவ்விருபடங்களின் பணிகள் முடிந்து வெளியீட்டிற்குதயாராகவுள்ள நிலையில் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குநர் ஆர்.கண்ணன் அடுத்தாகஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.சயின்ஸ் பிக்சன், ஃபேண்டஸி வகையில் காமெடி ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி அறிவியல்விஞ்ஞானியாகநடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சித்தார்த் சுபா வெங்கட் வசனம் எழுத, கபிலன் வைரமுத்து பாடல் எழுதுகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் பணிகளைவிரைந்து முடித்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.