Hansika Motwani to reunite with Silambarasan in new film

Advertisment

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி நேற்று (25.11.2021) திரையரங்கில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது. இதனிடையே நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர்ஜமீல் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகாமோத்வானி இருவரும் ‘மஹா’ என்ற படத்தில் நடித்துவந்தனர். சில பிரச்சனைகளால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுகிடப்பில் போடப்பட்டது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4b2a8b73-4028-474c-9233-23c7cf7f8244" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_62.jpg" />

இந்நிலையில், நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துநடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தை இயக்குநர்நந்தா பெரியசாமி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்தற்போது கௌதம்கார்த்திக் நடிப்பில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு சிம்பு - ஹன்சிகா நடிக்கும் படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

சமீபத்தில் டாப்சி நடிப்பில் இந்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 'ராஷ்மி ராக்கெட்' படத்திற்குஇயக்குநர்நந்தா பெரியசாமி கதை எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.