தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் ஹன்சிகா 2022ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘லவ் ஷாதி ட்ராமா’ என்ற பெயரில் வெளியானது.

Advertisment

ஹன்சிகாவின் கணவர் ஏற்கனவே திருமணமானவர். கடந்த 2016ஆம் ஆண்டு ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டுள்ளார். ரிங்கு, ஹன்சிகாவின் தோழி. அதே போல் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி நண்பராக சோஹேல் இருந்து வந்துள்ளார்.  

இந்த நிலையில் ஹன்சிகா, சோஹேலை பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து அவரவர் அம்மா வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.