hansika motwan talk about maha film

Advertisment

இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா 'மகா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்க, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இது நடிகை ஹன்சிகாவின் 50வது படமாகும்.எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.கடந்த ஆண்டே இப்படத்தின் அனைத்துபணிகளும் முடிந்த நிலையில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக 'மகா' படத்தின் வெளியீடு தடைபட்டுப் போனது.

இந்நிலையில் 'மகா' படம் குறித்து பேசிய ஹன்சிகா," இது என்னுடைய 50 வது படம். 'மகா' வெளியாக தாமதமாவது வருத்தம் என்று கூறமாட்டேன். அதே சமயம் பாடம் வெளியாக இவ்வளவுகாலம் எடுத்துக் கொண்டிருப்பதுஏமாற்றத்தை அளிக்கிறது. இருப்பினும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சீராகி 'மகா' படம் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.