Advertisment

1 நிமிஷம் லேட்டானாலும் 5 லட்சம் தரணும் - ஹன்சிகாவின் தாயார் வேண்டுகோள்

hansika mother demanded Rs 5 lakh to Sohael Kathuria family

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணம் ஒரு நிகழ்ச்சியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisment

'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் திருமணத்திற்கு வந்த பிரச்சனைகள் அனைத்தையும் எப்படி சமாளித்தார்கள் என்பது பற்றி ஒரு முழு பார்வையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் எபிசோடில்ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி, மாப்பிள்ளை வீட்டு குடும்பத்தாரிடம் ஒரு பிரச்சனை இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.

Advertisment

அவர் பேசுகையில், "ஒரு பணிவான வேண்டுகோள். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக வருகிறார்கள். நாங்கள் மிகவும் நேரத்தை கடைப்பிடிப்பவர்கள். அதனால் இன்று தாமதமாக வந்தால்...ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். எனவே கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

Hansika Motwani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe