நயன்தாராவை பின்பற்றும் ஹன்சிகா

hansika marriage is to streaming on  hotstar ott

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிபின்பு கதாநாயகியாக மாறி தமிழில் தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் அறிமுகமானார் ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம்தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், ஹன்சிகா -சோஹேல் கதுரியாதிருமணம்'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' என்கிற தலைப்பில்டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும்ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருமணத்தின் போது நடந்த கொண்டாட்டங்கள், சில முக்கியமான நிகழ்வுகள் மற்றும் சில சுவாரசிய சம்பவங்கள் குறித்து இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணமும் இதேபோல்நெட்ஃபிளிக்ஸ்ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hansika Motwani hotstar
இதையும் படியுங்கள்
Subscribe