hansika maariage to held in december 2022

Advertisment

தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களில்கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக தமிழில் தனது 50வது படமான 'மஹா' படத்தில் நடித்திருந்தார். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றது.

இதனையடுத்து ஆதி நடிப்பில் உருவாகி வரும் 'பார்ட்னர்', 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'ரவுடி பேபி', உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். மேலும் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் எமோஷனல், ஹாரரை அடிப்படையாகக் கொண்டு காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisment

எனவே திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தனது வருங்கால கணவர் குறித்த அறிவிப்பையும், திருமணம் குறித்த தேதியையும் விரைவில் ஹன்சிகா வெளியிடுவார் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.