/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_53.jpg)
தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹன்சிகா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக, தமிழில் தனது 50வது படமான 'மஹா' படத்தில் நடித்திருந்தார். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனையடுத்து ஆதி நடிப்பில் உருவாகி வரும் 'பார்ட்னர்', 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'ரவுடி பேபி'உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். மேலும் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் எமோஷனல்ஹாரரை அடிப்படையாகக் கொண்டு காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில், ஹன்சிகாவின் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் நடக்கவுள்ளதாகவும், அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்தகவல் வெளியானது. இந்நிலையில் ஹன்சிகா அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வருங்கால கணவரைஅறிமுகம் செய்துள்ளார். அதன்படி சோஹேல் கதுரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்யவுள்ளார். இவர் தொழிலதிபர் எனச் சொல்லப்படுகிறது.
மேலும், இது தொடர்பான சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் ஹன்சிகாவிடம் ப்ரொபோஸ் செய்கிறார் சோஹேல் கதுரியா. அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஹன்சிகா என்றென்றும் அன்புடன் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் ஹன்சிகாவுக்கு வாழ்த்துகளைத்தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)