/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mrchandramouli-banner728x90.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Cute Hansika Motwani Smiling.jpg)
சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்று படங்கள் பெருகி வருகின்றன. கடந்த மாதம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதை தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து வெளியான சஞ்சய்தத் வாழ்க்கை படமான 'சஞ்சு' படமும் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக பழம்பெரும் நடிகர்கள் என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் சமீபத்தில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோருடைய வாழ்க்கையும் படமாகிறது. இதற்கிடையே 'குலேபகாவலி' படத்தையடுத்து 'துப்பாக்கிமுனை', '100' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா அடுத்ததாக ஸ்ரீதேவியின் வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து பேசுகையில்.... "எனக்கு ஸ்ரீதேவியை மிகவும் பிடிக்கும். 'புலி' படத்தில் இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது எனக்கு நிறைய அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொன்னார். அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம். என் வாழ்க்கைக்கு அவரைத்தான் முன்மாதிரியாக கருதுகிறேன். ஸ்ரீதேவி வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அவர் வாழ்க்கை கதையை யார் படமாக்கினாலும் அதில் நான் நடிக்க தயார்" என்றார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)