Published on 24/01/2019 | Edited on 24/01/2019

ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகும் 'மஹா' படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து, யூஆர் ஜமீல் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தின் ஒரு சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகை ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். அதன்படி நடித்த காட்சியில் ஹன்சிகாவிற்கு தவறாக காயம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் காயத்தை பொருட்படுத்தாமல் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட ஆலோசனைக்கு பின்னரும் கூட ஹன்சிகா எந்தவொரு கையசைவும் இன்றி அந்த காட்சியில் நடித்து முடித்துள்ளார்.