Advertisment

இன்னும் இரண்டு நாட்களில் திருமணம்?- பதிலளித்த ஹன்சிகா!

hansika

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனக்கான இடத்தைப் பிடித்தார். தற்போது புதுமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் 'மஹா' என்றொரு படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இதில், முக்கியக் கதாபாத்திரத்தில் சிம்புவும் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டபடப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே நடிகைகளுக்குத் திருமணம் என்று வதந்திகள் பரவுவது வழக்கம். அதுபோல ஹன்சிகாவுக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்று செய்திகள் வெளியாகின. அந்த வதந்திக்கு ட்வீட் செய்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஹன்சிகா.

ஹன்சிகாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "இன்னும் இரண்டு நாட்களில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் ஹன்சிகா" என்று தெரிவித்தார்கள். அதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில் "ரப்பீஷ்.. அடக்கடவுளே.. யார் அவர்?" என்று பதிவிட்டுள்ளார்.

Hansika Motwani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe