ஒரே ஷாட்டில் உருவாகும் சாதனை படத்தில் ஹன்சிகா!

vdzbdzbdz

நடிகை ஹன்சிகா அடுத்ததாக ‘105 மினிட்ஸ்’எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறார். ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படம், ஒரே ஷாட்டில் படமாக்கப்படவுள்ளது. சைக்கலாஜிக்கல்திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில், ஒரு கதாபாத்திரம் மட்டும் நடிக்கும் முதல் தெலுங்கு படமாக இது அமைந்துள்ளது. இப்படம் குறித்து நடிகை நடிகை ஹன்சிகா மோத்வானி கூறும்போது...

"தெலுங்கு திரையுலகில் முதல்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை கொண்ட இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரமாக நான் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சி. இயக்குநர் ராஜா துஷ்ஷா என்னிடம் கதை கூறியபோது மிகவும் வித்தியாசமாக, ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. திரைக்கதை பரபர த்ரில் பயணமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு அம்சமும், அர்த்தம் பொதிந்ததாக, அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் ஒரு சிறப்பு என்னவெனில் படத்தின் தலைப்பான ‘105 மினிட்ஸ்’ என்பதுதான்.

இப்படத்தின் நீளம் 105 நிமிடங்கள் கொண்டது. படத்தின் உண்மையான நேரமும், படத்தின் கதை நேரமும் ஒன்றே. ஒரு வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் இளம்பெண்ணைப் பற்றியதுதான் கதை. இதைத் தவிர தற்போதைக்கு கதை குறித்த ரகசியங்களைக் கூற முடியாது. ஆனால் மேலும் பல ஆச்சர்யங்கள் படத்தில் காத்திருக்கிறது. மே 3ஆம் தேதி படப்பிடிப்பை துவங்கவுள்ளோம். பொம்மக் சிவா இப்படத்தினை தயாரிக்கிறார். படத்தின் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

Hansika Motwani
இதையும் படியுங்கள்
Subscribe