irumbu thirai.jpeg

hansika

குலேபகாவலி படத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா அடுத்ததாக நடிகர் விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகர் அதர்வாவுடன் ஒரு புதிய படத்தில் ஹன்சிகா நடிப்பதாக இருந்து பின் அது கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது ஹன்சிகா அடுத்து புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் அடுத்ததாக இயக்கம் '100' என்னும் படத்தில் நடிகர் அதர்வாவுடன் ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். இதன் மூலம் நடிகர் அதர்வாவுடன் நடிக்க ஹன்சிகாவிற்கு இன்னொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் அதர்வா போலீசாக நடிக்கவுள்ளார். '100' என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறது படக்குழு. மேலும் இப்படம் மூலம் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார் நடிகை ஹன்சிகா.

Advertisment