Advertisment

"உண்மையில் அந்த பழக்கமே எனக்கு இல்லை" - ஹன்சிகா

hansika about Partner movie

ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்துஅறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கியிருக்கும் படம் பாட்னர். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரியபிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

Advertisment

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இம்மாதம் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு குறிப்பிட்ட நிலையில் விரைவில் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இப்படம் குறித்து ஹன்சிகா பேசுகையில், "திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்துள்ளேன். சினிமாவை தாண்டி 31 குழந்தைகளைதத்தெடுத்து வளர்த்து வருவதால் அவர்களுக்கான கல்வி விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் மது சம்பந்தமான காட்சிகள் ஹிட்டாகி ட்ரெண்டானது. அது போன்ற காட்சிகள் இப்படத்திலும் இருக்கிறது. ஆனால், உண்மையில் எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. ஒரு ஆண் பெண்்உருவத்திற்கு மாறினால் எப்படி இருக்கும் என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்தது சவாலாக இருந்தது. கதாபாத்திரம் பிடித்துவிட்டதால் நடித்தேன். ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக பிடிக்கும்" என்றார்.

Actor aadhi Hansika Motwani hansika Aadhi Partner
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe