hansika about bollywood discrimination to sounth indian actor

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமான ஹன்சிகா, கதாநாயகியாக தமிழ், தெலுங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இகோர் இயக்கும் 'மேன்', ஆதியுடன் 'பார்ட்னர்', ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படம் என பல்வேறு படங்களை வைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர் என்பதால் ஆடை கொடுப்பதில் பாகுபாடு பார்த்துள்ளதாக ஒரு தெலுங்கு ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நிறையஆடை வடிவமைப்பாளர்கள் தென்னிந்திய நடிகர், நடிகைகளிடம் ‘உங்களுக்கு ஆடைகள் கிடையாது’ எனக் கூறுவார்கள். ஆனால் அது தற்போது மாறியுள்ளது.

Advertisment

அவர்களாகவே முன்வந்து, ‘உங்களுக்கு நிகழ்ச்சி இருக்கிறதா?நீங்கள் ஏன் எங்கள் ஆடைகளைஅணியக்கூடாது?’எனக் கேட்கின்றனர். நான் பணிவுடன் சரி எனச்சொல்வேன். அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா. நான் ஒரு இந்திய நடிகை.நான் இந்திய சினிமாவில் வேலை செய்கிறேன் என்று எப்போதும் கூறுவேன்”என்றார்.