‘மீண்டும் இணைந்திருக்கிறோம்’- உண்மையை ஒப்புக்கொண்ட ஹன்சிகா!

simbu hanshika

ஹன்சிகா தன் 50வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா புகை பிடிக்கும் படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது சிம்புவும் 'மஹா' படத்தில் நடிக்கவுள்ளார் என்று பரவியது.

சிம்புவும், ஹன்சிகாவும் சில வருடங்களுக்கு முன் காதலித்து பிரிந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மஹா' படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் நடக்கவுள்ளது. இதற்காக தன் உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் சிம்பு 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

மேலும் சிம்பு லண்டனில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அங்கே சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த செய்தியை உண்மையாக்கும் விதத்தில் நடிகை ஹன்சிகா இன்று காலை ட்வீட் ஒன்று செய்திருக்கிறார். இரு கைகள் கோர்த்திருப்பது போல் படம் ஒன்றை பதிவிட்டு அதனுடன், “இந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் அனைவரும் பரபரப்பாக பேசுகின்றனர். நாங்கள் தெரிவிப்பதற்கு முன்பே இந்த செய்தி வெளியாகிவிட்டது. ஆமாம், நானும் சிம்புவும் மஹா படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

maha Simbu hansika
இதையும் படியுங்கள்
Subscribe