Skip to main content

மாற்றுத்திறனாளிகளை கவர்ந்த 'மாயோன்' பட டீசர்..!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Handicapped liked maayon movie teaser

 

இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் 'மாயோன்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

ad

 

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக 'மாயோன்' படத்தின் டீசரைப் பார்வைத் திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் பிரத்தியேக ஒலிக் குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம். நாம் அனைவரும் நம்முள் பல 'இயலாமை'களையும், அச்சங்களையும் கொண்டிருக்கிறோம். சிலருக்கு இவை இயல்பாக இருக்கும். பலருக்கு இவை பலரால் வழங்கப்பட்டதாக இருக்கும் அல்லது சமூகத்தின் வாயிலாக கிடைக்கப் பெற்றதாக இருக்கும். எனவே அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரம் மற்றும் சமூகத்தை நோக்கி ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது " எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் பிரத்யேக ஒலிக்குறிப்புடன் 'சைக்கோ' படத்தின் டீசரை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் போன்ற தலைவர்கள் உலகிற்குத் தேவை” - பிரபல நடிகர் வாழ்த்து

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
sibiraj about vijay political party name

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். 

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சி பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
  
இந்த நிலையில் சிபிராஜ், “தளபதிக்கு முழு மனதுடன் தலை வணங்குகிறேன். அண்ணா தனது வார்த்தையைக் காப்பாற்றி அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஒரு ரசிகனாக அவரது படங்களை பெரிய திரையில் பார்க்கத் தவறினாலும், அவரைப் போன்ற தலைவர்கள் உலகிற்குத் தேவை என்பதால் அவரது முடிவை நான் ஆதரிக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

ஓடிடியில் சிபி சத்யராஜின் 'மாயோன்'

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

Maayon ott update

 

டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரிப்பில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'மாயோன்'. கிஷோர் இயக்கிய இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், ராதாரவி, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசையமைத்திருந்தார். 

 

புராண இதிகாச திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கனடாவில் நடைபெற்ற 47வது டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராண திரைப்பட விருதை வென்றது. இந்நிலையில் இப்படத்தின் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பை விரைவில் டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகவுள்ளது.