
கடந்த சனிக்கிழமை அன்று ஜப்பானிய நடிகர் ஹருமா மியூரா காலமானார் என்கிற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மயக்கமான நிலையில் காணப்பட்ட ஹருமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 30.
அவரது ஏழாவது வயதில் சீரியல் ஒன்றில் நடித்து பிரபலமான ஹருமா, படிப்படியாக ஜப்பான் சினிமாதுறையில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். 'தி எடர்னல் ஜீரோ' என்னும் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஜப்பான் சினிமா அகாடமி விருதை வென்றுள்ளார்.
ஹருமா கடந்த சனிக்கிழமை அன்று பணிக்கு வரவில்லை, அதனால் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். ஹருமா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹருமாவின் மரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)