Skip to main content

''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

cfad

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
 


இதனால் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உணவின்றி, உறைவிடமின்றி தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பசி பட்டினியுடன் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களில் சில தரப்பினர் வீடு திரும்ப அரசாங்கமும், பிரபலங்களும் உதவி வருகின்ற நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து 'சில்லுக்கருப்பட்டி' பட இயக்குனர் ஹலிதா ஷமீம் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... ''வெறும் வயிற்றில், சுமை தூக்கி, கால்கள் வெடிக்க, பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு தண்ணி கொடுக்க முடியாமல் வெதும்பிய மன நிலையில் பாலைவனமான நெடுஞ்சாலைகளில், உயிரைப் பிடித்துக் கொண்டும், பெட்டிகளை இழுத்து கொண்டும் நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம், இனி நடக்காமல் இருக்க, ஓங்கட்டும் பசியின்குரல்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான் மகள் - சூப்பர் ஹிட் இயக்குநருடன் கைகோர்த்தார்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

ar rahman daugter khatija rahman become a music director

 

சில்லுக் கருப்பட்டி, பூவரசம் பீப்பீ, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கிறார். இப்போது 'மின்மினி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை 'ஆங்கர் பே ஸ்டுடியோஸ்' தயாரிக்க எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

 

இப்படம் குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால் நடிப்பவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது 2015 ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உண்மையிலே அவர்கள் இளம் வயதினராக வளர்ந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை 7 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.  

 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார். அவர் திறமையான மனிதர் என்றும் சிறப்பான இசை வந்துகொண்டிருப்பதாகவும் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார். கதீஜா ரஹ்மான், 'புதிய மனிதா...' (எந்திரன்), 'காயம்...' (இரவின் நிழல்), 'சின்னஞ்சிறு...' (பொன்னியின் செல்வன் 2) உள்ளிட்ட பாடல்களில் பாடியுள்ளார்.

 

 

Next Story

"நான் பார்த்து பார்த்து சேர்த்தது திருடப்பட்டுள்ளது" - மம்மூட்டி படம் மீது ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Stealing all the aesthetics from a film isn't acceptable said halitha shameem about Nanpakal Nerathu Mayakkam

 

மம்மூட்டி நடிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியான படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. தமிழ்நாட்டில் சில காரணங்களால் ஜனவரி 26ஆம் தேதி வெளியானது.

 

இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் மற்றும் ஒளிப்பதிவாளராக மம்மூட்டியின் 'பேரன்பு' படத்தில் பணியாற்றிய தேனி ஈஸ்வர் உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் பணியாற்றியுள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.    

 

இந்த நிலையில் இப்படம் குறித்து 'சில்லுக்கருப்பட்டி', 'ஏலே' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம், காட்சிகள் திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, "ஒரு படத்தின் அனைத்து அழகியலையும் திருடுவது ஏற்கத்தக்கது அல்ல. ஏலே படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன்முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். 

 

அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்தப் படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயர்ச்சியைத் தருகிறது. ஐஸ்காரர் இங்கே பால்காரர். செம்புலி இங்கே செவலை. அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலேவில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார். 

 

படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள், இவையாவும் படத்தில் பார்த்தேன். நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்கப்பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதைப் பதிவிடுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.