Advertisment

படப்பிடிப்பிற்காக ஆறு வருடம் காத்திருந்த ஹலீதா ஷமீம்

Halita Shamim, who waited six years for filming

2014-ஆம் ஆண்டு வெளியான 'பூவரசம் பீப்பீ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஹலீதா ஷமீம். அடுத்து இவர் இயக்கத்தில் வெளியான படம் 'சில்லுக்கருப்பட்டி'. ஆந்தாலஜி ஜானரில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. கடைசியாக இவர் இயக்கத்தில் 'ஏலே' மற்றும் 'புத்தம் புது காலை விடியாதா' என்ற ஆந்தாலஜி சீரிஸில் 'லோனர்' படம் வெளிவந்தது. தனித்துவமான படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் கவனிக்க படும் இயக்குநராக மாறியுள்ளார்.

Advertisment

இதனிடையே ஹலீதா ஷமீம் 'மின்மினி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆறு வருடத்திற்கு முன்பே நிறைவடைந்துள்ளது. அதனை தனது சமூக வளைத்தபக்கத்தில் பகிர்ந்தார். நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த பதிவை பகிர்ந்து ஆறு வருடம் கழித்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

halitha shameem minmini movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe