Advertisment

சிவாஜி மகன் திடீர் அறிவிப்பால் மகிழ்ச்சியில் பெண்கள்!

dwdwdw

Advertisment

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனும், நடிகருமான ராம்குமார் ஷங்கரின் 'ஐ' படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலுக்காக பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் அவர் தற்போது நடிகர் திலகம் சிவாஜியின் நினைவு நாளையொட்டி பெண்களுக்கு இலவசமாக அரை சவரன் தங்கம் கொடுக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

"கரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் பரவத் துவங்கியுள்ளது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கூட்டமாக கூடாதிருத்தல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டுகிறேன். இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21 ஆம் நாள் நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவக்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் யாவும் விரைவில் தெரிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

actor sivaji ganesan
இதையும் படியுங்கள்
Subscribe