அரை மில்லியன் பார்வையாளர்களை கடந்த அப்பா காண்டம் குறும்படம்

appa kandam

யூடியூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில் ஆர்வா இயக்கத்தில் சமீபத்தில் யூடியூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் திரைப்படம் ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. ரெட்ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வளர்ந்து வரும் இயக்குனர் ஆர்வா இந்த குறும்படத்தை இயக்கி இருக்கின்றார். இவர் இதற்கு முன் நிறைய தொலைகாட்சி தொடர்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த திரைப்படத்தின் மற்றொரு பிரதான கதாபாத்திரத்தில் ஹரிஷ் ரவிச்சந்திரன் நடித்துள்ளார்கள். 26 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படமானது வலையேற்றிய ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களை பெற்றதோடு, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாஸிட்டிவ் கமெண்டுகளை பெற்றுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காண்டம் என்றால் நிறைய பேர் கருத்தடை சாதனம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது தமிழ் காண்டம் என்பதை குறிக்கும். உதாரணத்திற்கு சுந்தர காண்டம், ஆரண்ய காண்டம் போல இது அப்பா காண்டம். பொதுவாக காண்டம் என்றால் ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்து தெளிவான ஒரு மனநிலைக்கு வரும் படலத்தைத்தான் காண்டம் என்று கூறுவார்கள். இதில் அப்பாவிற்கும் அப்படி ஒரு மனக்குழப்பம்தான் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் மையக்கதை என்று இயக்குனர் ஆர்வா, காண்டத்திற்கான விளக்கத்தை தெரிவிக்கிறார்.

appa kandam
இதையும் படியுங்கள்
Subscribe