Advertisment

'தீரன்' படத்துக்காகத் தேடும்போது நக்கீரன்தான் கிடைக்குது? இயக்குநர் எச்.வினோத் எக்ஸ்க்ளூசிவ்

h vinoth said nakkheeran magazine reference theeran movie

Advertisment

இயக்குனர் எச்.வினோத் இயக்கிய படங்கள் எதுவுமே சாதாரணமாவை அல்ல. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது. படம் குறித்தும் அவரது பயணம் குறித்தும் பேசினோம். நக்கீரன் இதழில் வெளியாகியுள்ள முழு பேட்டியின் ஒரு பகுதி இங்கே...

வலிமை படத்திற்கான இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வந்தது?

இரண்டு மூன்று விஷயங்கள் சேர்ந்ததுதான் இந்தக் கதை. பைக் திருடனைப் பற்றி ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அந்தக் கதையை பாசிட்டிவாக மாற்றி அதில் வேறு சில விஷயங்கள் சேர்த்து வலிமை கதையை உருவாக்கினோம்.

கதைகளுக்கான முதல் சிந்தனை எங்கிருந்து கிடைக்கும்? நிறைய வாசிப்பீர்களா?

நான் புத்தகங்கள் அதிகம் வாசிப்பதில்லை. ஆனால், நாளிதழ்கள், வார இதழ்கள் நிறைய வாசிப்பேன். அதில் வரும் செய்திகள் என் கதைக்கு பங்களிக்கின்றன. அதன் தாக்கம் என் படங்களில் இருக்கின்றன. 'தீரன்' படத்துக்காக நான் தேடும்போது நக்கீரன் செய்திகள், படங்கள்தான முதலில் கிடைக்குது? அதனால் செய்திகளின் தாக்கம் என் படங்களில் இருக்கும்.

Advertisment

வலிமை டீசர் பார்க்கும்போது ஐரோப்பாவில் உள்ள 'சாத்தான் ஸ்லேவ்' என்ற பைக் ரேஸிங் க்ருப்பை பற்றிய கதைபோல தெரிகிறதே?

இது அதைப் பற்றிய கதை இல்லை. முழுக்க முழுக்க இந்தியாவில் சென்னையில் நடக்கக்கூடிய கதைதான் இந்தப் படம். அப்படி ஒரு பைக் குழு இருப்பதால் 'சாத்தான் ஸ்லேவ்' என்ற பெயரை மட்டும் பயன்படுத்தியிருக்கிறோம்.

ACTOR AJITHKUMAR valimai
இதையும் படியுங்கள்
Subscribe