/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/HV1.jpg)
பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்க தமிழின் உச்ச நட்சத்திரங்கள் நடித்த இருதிரைப்படங்கள் வெளியாகின. இதில்அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் அஜித் உடன் இணைந்தமூன்றாவது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தில் தீவிரப் பற்றுகொண்ட ஹெச்.வினோத் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தார். துணிவு புரொமோசன் வீடியோக்கள்எல்லாவற்றிலுமே மாலை போட்டு விரதமிருக்கும் காவி வேட்டியுடனும் மாலையுடனுமே காட்சி அளித்தார். இந்நிலையில், துணிவு திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் சாமியே சரணம் ஐயப்பா என்று இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார். இதனை கத்துக்குட்டி, உடன்பிறப்பு இயக்குநர் சரவணன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)