h vinoth directing yogibabu next movie

Advertisment

வலிமை படத்தைத்தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கியுள்ளார். அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், படக்குழு படத்தின் இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து கமல் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து எச்.வினோத் படம் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கான அறிவிப்புவிரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5c078b3e-ff01-46cc-837c-e4f052d48ec6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_9.jpg" />

இந்நிலையில், இயக்குநர் எச்.வினோத், யோகிபாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த எச்.வினோத் இதனை உறுதி செய்திருக்கிறார். கமல் படத்தை முடித்த பிறகேஇந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்படும் எனத்தெரிகிறது. இருப்பினும், எச்.வினோத்தின் அடுத்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோஎச்.வினோத்தின் அடுத்தபடம் குறித்த அறிவிப்புவெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.