h vinoth directing kamalhaasan movie

Advertisment

வலிமை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில்நடைபெற்று வருகிறது.

alt="h vinoth directing kamalhaasan movie " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="927b4d7b-2fb5-4790-9d9f-71fbf446beb5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_24.jpg" />

இந்நிலையில் இயக்குநர் எச். வினோத்தின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் எச். வினோத் அடுத்தாககமல்ஹாசன்நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர்எச். வினோத் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஒரு அரசியல் கதையை கூறியுள்ளாராம். அதை கேட்ட கமலும்ஓகே சொல்லிவிட்டாராம். ஏகே 61 படத்தின் பணிகள் முடிந்த பிறகு கமல் படத்தின் பணியில் கவனம் செலுத்தவுள்ளாராம். இப்படத்தில் கமல் நடிப்பதோடு, தயாரிக்கவும் உள்ளாராம்.