Advertisment

''அஜித் சார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்!'' - எச்.வினோத் அறிவிப்பு!

fs

நடிகர் அஜித்தின் 49- ஆவது பிறந்தநாள் (இன்று) மே 1- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் சமூகவலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் எச்.வினோத் வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..."கரோனா பிரச்சினை காரணமாக முதல் தோற்றத்தை(First Look) ஒத்திவைக்க அஜித் சார் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னித்து விடுங்கள் ரசிகர்களே'' எனப்பதிவிட்டுள்ளார்.

Advertisment

அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ள நிலையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுமாறு வலியுறுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டாம் என அஜித் கேட்டுக்கொண்டுள்ளதாக எச்.வினோத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கரோனா தொற்று காரணமாகத் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரிடம் தெரிவித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

valimai AJITH BIRTHDAY
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe