ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/h-raja_10.jpg)
இந்த நிலையில், ப. சிதம்பரம் போல் தமிழகத்தில் ஓர் எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
மேலும் பேசியவர், தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டத்தில் தனது கவனத்தை செலுத்த வேண்டும். அதிக தடுப்பணைகளை கட்ட வேண்டும். முதல் அமைச்சர் பழனிசாமியின் இஸ்ரேல் பயணம் வரவேற்கத்தக்கது என்றார்.
Follow Us