ADVERTISEMENT

திருமுருகன் காந்தி, பியூஷ் மனுஷ் மற்றும் பல சமூக செயல்பாட்டாளர்கள் இருக்கும் ஜிப்ஸி டீஸர்!

03:05 PM Jan 18, 2019 | santhoshkumar

குக்கூ, ஜோக்கர் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகனின் அடுத்த படம் ஜிப்ஸி. இதில் ஜீவா கதாநாயகானாக நடிக்க, கதாநாயகியாக நடாஷா சிங் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த படத்தில் வெரி வெரி பேட் என்ற பெயரில் ஒரு பாடல் முன்னமே வெளியாவதாக இருந்தது. ஆனால், அது தள்ளிப்போய் வருகின்ற 22ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. அதற்கான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் திருமுருகன் காந்தி, பியூஷ் மனுஷ், வளர்மதி, முகிலன் மற்றும் பல சமூக செயல்பாட்டாளர்கள் நடித்திருக்கின்றனர். இந்த டீஸரில்கூட எந்த போராட்டத்திற்காக கைது செய்தார்கள் என்றே கேட்பது போன்று காட்டப்படுகிறது. மேலும் இந்த பாடலில் நல்லக்கண்ணு பங்கேற்றிருக்கிறார் என்று புகைப்படம் வெளியாகியிருந்தது. டீஸரின் இறுதி காட்சியாக அந்த புகைப்படத்தை காட்டுகிறார்கள்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT