குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூமுருகன் அடுத்து இயக்கியிருக்கும் படம் ஜிப்ஸி. நெடுநாட்களுக்குப் பின் கமர்சியல் பொழுதுபோக்குப் படமல்லாத ஒரு படத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் செல்வக்குமார். 'அருவி'யில் எடிட்டிங்கில் கவனமீர்த்த ரேமண்ட் டெரிக் க்ராஸ்ட்டா இந்தப் படத்தின் படத்தொகுப்பை செய்திருக்கிறார். 'ஜோக்கர்' படத்தில் ராஜூமுருகன் பேசிய மக்கள் அரசியல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'ஜிப்ஸி' படத்தின் டீசர்நேற்று வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு விதமான நிலப்பரப்பில் படமாக்கப்பட்டுள்ளது ஜிப்ஸி. பல்வேறு வாழ்க்கைமுறைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதும் டீசரில் தெரிகிறது.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/E5pELCDq820.jpg?itok=F0ngcjAY","video_url":"