Advertisment

ஜிப்ஸி படத்திற்கு ஒருவழியா சென்சார் சான்றிதழ் வந்துடுச்சு...

குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜு முருகன். இவரின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. புதுமுக நடிகை நடாஷா சிங் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். குக்கூ படத்திற்கு பிறகு இவரின் மூன்றாவது படமான இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Advertisment

jeeva

இந்த படத்தில் ஜீவா ஒரு நாடோடி, இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்கிறான். அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதை. மேலும் ஜீவாவின் கதாபாத்திரம் கம்யூனிச சித்தாந்தங்களை கொண்ட ஒருவராக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் வேலைகள் அனைத்தும் எப்போதோ முடிந்து வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. அதற்கு காரணம் படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல், அதனால் இந்த படத்தில் பல காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று தணிக்கை குழுவில் அறிவித்ததாக சொல்லப்படுகிறது. அதை படக்குழு கேட்கவில்லை என்பதால் தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது.

Advertisment

அதன்பின் ரிவைசிங் கமிட்டிக்கும் சென்றிருக்கிறார்கள். அங்கும் சான்றிதழ் தர மறுத்துள்ளார்கள். எனவே இப்போது தீர்ப்பாயத்திற்கு சென்றுள்ளார்களாம். அங்கு படத்திற்கு தணிக்கை தந்தால்தான் படம் வெளியாகும். இல்லையெனில் நீதிமன்றத்தைத்தான் படக்குழுவினர் அணுக வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

gypsy jeeva rajumurugan
இதையும் படியுங்கள்
Subscribe