Advertisment

ஜோக்கர் இயக்குனருடன் ஜீவா... 

ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் 'ஜிப்ஸி'. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் ஜிப்ஸி ’படத்தின் படப்பிடிப்பு இன்று காலை காரைக்காலில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் 'அருவி' படத்தின் எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பை கவனிக்க எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் 'ஜிப்ஸி' படத்தில் தேசிய விருது இயக்குனர் ராஜு முருகனுடன் முதன்முறையாக இணையவிருப்பதால் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

Advertisment
gypsy jiiva
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe