Skip to main content

"போ... போ... தனிமரம் நானடி..." -  ஜி.வி.பிரகாஷை ஃபீல் பண்ண வைத்த இசையமைப்பாளர் 

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சசி. தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்கியிருக்கிறார். இந்த மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ஹிட்டாகிக்கொண்டிருக்கின்றன.

 

g.v.prakash smp

 

'மயிலாஞ்சியே', 'ராக்காச்சி ரங்கம்மா', ஆகிய இரு பாடல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து இளைஞர்களின் ரிங் டோனாகவும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாகவும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. புதிய இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் 'உசுரே' பாடல்  சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. 'உசுரே விட்டு போயிட்ட... மனச வெட்டி வீசிட்ட...' என்று தொடங்கும் இந்தப் பாடல் காதலர்களுக்குள் ஊடல் வரும்பொழுது நிகழ்பவைகளை சொல்வதாக இருக்கிறது.

மிக மென்மையாக, அதிக அழுகையாக இல்லாமல், காதல் வலியை பாடும் இந்தப் பாடலை மோகன்ராஜன் எழுதியிருக்கிறார். இப்படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ், இந்த ஆல்பத்தில் தனது ஃபேவரிட் இதுதான் என்று ஃபீல் பண்ணி இந்தப் பாடலை தனது ட்விட்டர் அக்கவுண்டில் பகிர்ந்தார். இசையமைப்பாளர் சித்து குமாருக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்திருந்தார்.        


 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் 'திருக்கார்த்தியல்' சிறுகதை - கையில் எடுத்த பிரபல இயக்குநர்

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

director sasi to direct Thirukarthiyal short story

 

சாகித்ய அகாடெமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடெமி விருது, யுவ புரஸ்கார் மற்றும் பால புரஸ்கார் விருதுகள் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள், ’ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக பால புராஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கருக்கும் ’திருக்கார்த்தியல்' என்ற சிறுகதை தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் ராம் தங்கமுக்கும் அறிவிக்கப்பட்டது. 

 

இவ்விருது இலக்கியத் துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவதால் இரு எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினார். 

 

இந்நிலையில் ’திருக்கார்த்தியல்' சிறுகதை, தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளதாக எழுத்தாளர் ராம் தங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் என பல வெற்றி திரைப்படங்களின் இயக்குநரான சசி, கடந்த ஆண்டு திருக்கார்த்தியல் புத்தகத்தினை வாசித்து விட்டு நேரில் அழைத்து பாராட்டினார். தற்போது சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்ததுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை படமாக்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு என் பேரன்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Next Story

“என்னிடமிருந்து எதையும் வாங்கவில்லை” - இயக்குநர் சசி விளக்கம்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

 Director Sasi Speech at Pichaikkaran 2 Pre Release Event

 

'பிச்சைக்காரன் 2' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் சசி கலந்து கொண்டு சிறப்பித்தார். இப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியும் இயக்குநர் சசியும் இருவரும் கலந்து கொண்டு பேசிய ஜாலியான உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

 

விஜய் ஆண்டனி: சசி சார்தான் இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்தியவர். பிச்சைக்காரன் படம் நீங்கள் எனக்குப் போட்ட பிச்சை. எத்தனை படம் செய்தாலும் பிச்சைக்காரன் போல் ஒரு படம் கிடைக்காது. அந்தக் கதையை நீங்கள் மிகச்சிறந்த முறையில் உள்வாங்கி உருவாக்கினீர்கள். 

 

சசி: அந்தக் கதையைப் பலரிடம் நான் சொல்லி ஓகே ஆகவில்லை. ஆனால் உங்களுக்கு அந்தக் கதை புரிந்தது. சாதாரண ஒரு மனிதனின் டேஸ்ட் விஜய் ஆண்டனிக்கு இருக்கிறது. அதுதான் அவருடைய இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம். இந்தப் படத்தை இயக்கும்போது உங்களுக்கு எந்த அளவு தடுமாற்றம் இருந்தது? அதை எப்படி சமாளித்தீர்கள்?

 

விஜய் ஆண்டனி: எனக்கு இந்தப் படத்தை இயக்குவதில் முதலில் விருப்பம் இல்லை. நீங்கள் இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று காத்திருந்தேன். 

 

சசி: உண்மைதான். இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்று விஜய் ஆண்டனி நீண்ட காலம் காத்திருந்தார். வேறு ஒரு படத்தில் நான் கமிட்டானதால் இந்தப் படத்தை என்னால் இயக்க முடியவில்லை.

 

விஜய் ஆண்டனி: அதன் பிறகுதான் நான் இந்தப் படத்தை இயக்க முடிவு செய்தேன். கதை எழுதிவிட்டேன். ஆனால் முதல் 10 நாட்கள் படம் என் கண்ட்ரோலுக்கு வரவில்லை. இந்தப் படத்தின் மூலம்தான் இயக்கம் குறித்து கற்றுக்கொண்டேன். படம் நன்றாக வந்திருக்கிறது. கிட்டத்தட்ட பிச்சைக்காரன் முதல் பாகத்தின் காப்பிதான் இது. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்துள்ளேன். 

 

சசி: இந்தப் படத்துக்காக விஜய் ஆண்டனி என்னிடம் எந்த கண்டென்டும் வாங்கவில்லை. வெற்றி பெறுவதற்கான தகுதி அவரிடம் இருந்ததால்தான் அவர் இந்தப் படத்தையே தொடங்கியிருக்கிறார். நிச்சயமாக அவர் நல்ல படத்தை எடுத்திருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.