/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/55_46.jpg)
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். கல்லூரி மாணவராக ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இப்படத்தில், இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்திற்கு ‘!செல்ஃபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநரான மதிமாறன் புகழேந்தி, வெற்றி மாறனின் உதவி இயக்குநர் ஆவார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் வெற்றி மாறன் மதிமாறனுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துதெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)