இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷம். தேர்வு செய்த குழுவினருக்கு நன்றி. முக்கியமா வாத்தி படத்தோட டீம். தனுஷ் சார், அவர் தான் என்னை இந்த படத்துக்கு ரெக்கமெண்ட் பன்னினார். இது என்னுடைய இரண்டாவது தேசிய விருது. இதுக்கு முன்னாடி சூரரைப் போற்று படத்திற்காக பின்னணி இசைக்காக கிடைச்சுது. இந்த முறை பாடல்களுக்காக கிடைச்சுருக்கு. ரொம்ப மகிழ்ச்சி. எல்லாருக்கும் நன்றி” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வாத்தி படம் தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமான படம். தெலுங்கு - தமிழ் என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டது. தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பில் வெளியானது. இப்படத்தை நாகவம்சி மற்றும் சாய் தயாரித்திருந்தனர். வெங்கி அட்லூரி இயக்கியிருக்க சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் கலவையான விமர்சனத்தையும் தெலுங்கில் நல்ல வரவேற்பையும் இப்படம் பெற்றிருந்தது.
From The Desk of @gvprakash 💥🔥 pic.twitter.com/LvVCKEzFxO
— Yuvraaj (@proyuvraaj) August 1, 2025