gv prakash thangalaan dhanush movie update

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, தனுஷ் இயக்கி, தயாரிக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்‘, மற்றும் பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தங்கலான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="af0df110-eca9-4d50-8b5f-6cbc1d93ad5e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_14.jpg" />

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இசையமைத்து வரும் படங்கள் குறித்த அப்டேட்டுகளை பகிர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘தங்கலான்’ பட அப்டேட்டை பகிர்ந்துள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் விரைவில் வெளியிடுவோமா என்றும் தங்கலான் படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

gv prakash thangalaan dhanush movie update

இதில் ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், அப்படத்திலிந்து டீசர், ட்ரைலர் மற்றும் முதல் பாடல் ‘மினிக்கி மினிக்கி...’ இதுவரை வெளியாகியிருந்தது. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில், காதலர் தினம் அன்று வாழ்த்து போஸ்டர் மற்றும் வெளியாகியிருந்தது.