Advertisment

“டார்லிங் படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம்” - ஜி.வி பிரகாஷ்

gv prakash started his dubbing for his 13 movie

மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே.விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிக்கா, தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்க, இவர்களுடன் ஆதித்யா கதிரும் இணைந்து நடித்துள்ளார். படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று மதியம் 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்.

Advertisment

படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, “ராட்சசன், போர் தொழில் படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்".

Advertisment

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், "13 படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக்களம் புதிதாக இருக்கிறது. 'டார்லிங்' படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.

13 movie GV prakash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe