gv prakash

Advertisment

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், “யானை பட வாய்ப்பை எனக்கு வழங்கிய ஹரி சாருக்கு நன்றி. நம்முடைய மண் சார்ந்த இசையைக் கொடுப்பதற்கான வாய்ப்பு சில படங்களில் எனக்கு அமையும். கடைசியாக அசுரன் படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, யானையில் கிடைத்துள்ளது. இந்தப் படத்திலுள்ள பாடல்கள் அனைத்தும் எமோஷனலாக மண் வாசனையுடன் இருக்கும்.

இந்த மாதிரி ஒரு ரெஃபரென்ஸ் இருந்தா நல்லா இருக்கும் என்று ஹரி சாரிடம் சொன்னால் அடுத்த சந்திப்பிலேயே அதைக் கொண்டுவந்துவிடுவார். அறிமுக இயக்குநர் எப்படி வேலை பார்ப்பாரோ அதே மாதிரி இந்தப் படத்தில் வேலை பார்த்தார். அது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவருடன் இணைந்து வேலை பார்த்த அனுபவமே சிறப்பாக இருந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.