மு.மாறன் இயக்கத்தில், ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் மு. மாறன் பேசுகையில், “தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது. இவரைப் போல ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். இந்தப் படம் வெற்றியடைந்து அவர் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டும். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் தனஞ்செயன் சார் மாதிரியான ஒருத்தர் கைக்கொடுத்தது பெரிய விஷயம். சரியான படங்களையும் திறமையாளர்களையும் வெளிச்சம் போட்டு காட்டுவார். அவர் எங்கள் படத்திற்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. படக்குழுவினர் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி. ஜிவி பிரகாஷ் சாருடன் அடுத்தடுத்து படங்கள் செய்ய வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.
ஜிவி பிரகாஷ் பேசுகையில், “படக்குழுவினர் அனைவரும் சின்சியராக வேலை பார்த்துள்ளார்கள். நல்ல படத்தை மாறன் கொடுத்துள்ளார். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களை கட்டிப்போடும் த்ரில்லராக படம் இருக்கும். இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபகரமானதாக அமைய வேண்டும். இடைவேளைக்கு முன்பு வரும் 40 நிமிடங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/05/377-2025-09-05-19-15-17.jpg)