Advertisment

“கோடிக்கணக்கில் ஆஃபர்” - நோ சொன்ன ஜி.வி. பிரகாஷ்

gv prakash says no to gambling ads

திரைத்துறையில் நுழைவதற்குசரியான அணுகுமுறை தெரியாமல் பலரும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கு படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் ‘ஸ்டார்டா’ எனும் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராக ஜி.வி. பிரகாஷ்குமார் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழாவில் ஜி.வி. பிரகாஷ்குமார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ், நடிகர் ஷ்யாம் குமார், தயாரிப்பாளர்கள் சி.வி. குமார், தனஞ்ஜெயன், திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

இவ்விழாவில் ஜி.வி. பிரகாஷ்குமார் பேசுகையில், “நரேஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு வாழ்த்துகள். நான் சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். நிறையஇளம் திறமையாளர்களுடன் பணிபுரிந்து வந்திருக்கிறேன். வெற்றிமாறன், அட்லீ, ஏ.எல். விஜய்என பல புது இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் இதுவரை இருபத்தி மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். இதில் பதினேழு படங்கள் புது இயக்குநர்கள் தான் இயக்கியிருக்கிறார்கள். நிறைய புதுமுக நடிகைகள், நிறைய புதுமுக பின்னணி பாடகர்கள், பாடகிகளுடன் பணியாற்றியிருக்கிறேன்.

Advertisment

குளிர்பான விளம்பரங்கள்பண்ணமாட்டேன். சூதாட்ட விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் ஆஃபர் பண்ணாங்க. பண்ணமாட்டேன்னு சொல்லிவிட்டேன். ஆனால் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்மை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்றிருப்பதற்கும் மகிழ்கிறேன்.

பொதுவாக சினிமாவில் வாய்ப்பு தேடுவது எப்படி? எனத்தெரியாது. மேனேஜரைப் பார்க்க வேண்டுமா? இயக்குநர்களை பார்க்க வேண்டுமா? அல்லது அவர்களது உதவியாளர்களை பார்க்க வேண்டுமா? அலுவலத்திற்கு நேரடியாக செல்ல வேண்டுமா..? அது எங்கேயிருக்கிறது?இப்படி நிறைய விசயங்கள் இன்றைய தேதி வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. பாடல் எழுதும் பாடலாசிரியராகட்டும். பாடும் பாடகர்களாகட்டும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் எங்கு பார்க்க வேண்டும்? யாரை பார்க்க வேண்டும்? என்று கேள்வி கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் பதிலாக இந்த பிளாட்ஃபார்ம் இருக்கிறது.

இதை பெரிதும் வரவேற்கிறேன். ஏனெனில் இந்த பிளாட்ஃபார்மில் திறமைசாலிகள் கண்டறியப்பட்டு,அவர்களின் வீடியோவும் இடம்பெற்றிருக்கிறது. இது பெரிய பெரிய திரைப்பட நிறுவனங்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் போன்றவர்களுக்கு தங்களுக்கு தேவையான திறமையான கலைஞர்களை தேர்வு செய்ய பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். நிறைய பேருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்ற இந்த பிளாட்ஃபார்மில் நானும் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என விரும்பினேன். நானும் என்னுடைய படங்களுக்கு இந்த பிளாட்ஃபார்மில்உள்ள திறமைசாலிகளை தேர்வு செய்து வாய்ப்பளிக்க முயற்சிக்கிறேன். புதிய கலைஞர்களுக்கு இந்த பிளாட்ஃபார்ம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

GV prakash
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe