gv prakash saindhavi case update

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர். பின்பு இருவரும் திருமண வாழ்க்கையில் பிரிந்திருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும் எனக் கூறியிருந்தனர்.

Advertisment

இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் கடந்த மாத இறுதியில் விவாகரத்து கோரி நீதி மன்றம் சென்றனர். மேலும் விசாரணையின் போது ஆஜராகி மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். பின்பு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஒரே காரில் இருவரும் திரும்பிச் சென்றனர்.

Advertisment

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வ சுந்தரி, வரும் செப்டம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.