தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஒவ்வொரு மாதமும் தள்ளி போய், இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தப்பாடில்லை.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் பி.ஜி.எம் ஸ்கோர் நிறைவடைந்ததாக அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தங்கலான் பின்னணி இசைக்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. என்னுடைய பெஸ்ட்டை இப்படத்திற்கு கொடுத்துள்ளேன். என்ன மாதிரியான படம்!!!.... இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். என்ன ஒரு அற்புதமான டிரெய்லர்!!.... வியப்பூட்டக்கூடிய டிரெய்லர் விரைவில் உங்கள் மனதை கவரவுள்ளது. தங்கலான் படத்திற்காக இந்திய சினிமா தயாராகுகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.