Advertisment

புது இசையமைப்பாளர்களுக்கு ஜி.வி. பிரகாஷ் வேண்டுகோள்

gv prakash request to new music directors

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழு புரோமொஷன் பணிகளில் பிஸியாகவுள்ளது.

Advertisment

அந்த வகையில் நக்கீரன் ஸ்டூடியோவிற்கு இயக்குநர் பி.வி. ஷங்கர், ஜி.வி. பிரகாஷ், தீனா, இவானா உள்ளிட்டோர் நேர்காணல் கொடுத்துள்ளனர். அப்போது ஜி.வி பிரகாஷிடம் தமிழ் இசைத்துறையின் வளர்ச்சி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”தமிழ் சினிமாவில் பெரிய லெஜண்ட்டுகள் இருக்கிறார்கள். அவுங்க தான் நமக்கு பாதை வகுத்துருக்காங்க. எம்.எஸ் வி, இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் மூன்று பேரும் தமிழ் சினிமா இசைக்கு மிகப்பெரிய மரியாதையைக் கொடுத்துள்ளனர். அதை கெடுக்காமல் இசைத்துறையை கொண்டு போக வேண்டும் என எல்லாரையும் கேட்டு கொள்கிறேன். அடுத்து வர போகிறவர்கள் வெறும் கமர்ஷியல் பாட்டு போடாமல், கலை வடிவத்தை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.

Advertisment
GV prakash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe