Advertisment

ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட ‘ஒரு நொடி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

gv prakash released first look poster of oru nodi

அறிமுக இயக்குநர் மணி வர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர்,ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இப்படத்தின் இசைப் பணிகளை மேற்கொள்கிறார். மதுரை அழகர் மூவிஸ்மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’ உள்ளிட்ட படங்களை வெளியிட்டதனஞ்செயன் வழங்குகிறார்.

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகு விரைவில் திரையில் வெளியாகவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும்.

Advertisment
GV prakash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe